Skip to main content

அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ளும் 4வது அதிபர்..!

December 19, 2019

ராபின்சன் ராஜரத்தினம்

கட்டுரையாளர்

Image

அமெரிக்க அரசியல் வரலாற்றில் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 தேதி பொறுப்பேற்றார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளும் அவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டன. கறுப்பின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, பெண்களை மதிப்பு குறைந்த வகையில் பேசுவது, அமெரிக்காவில் உள்ள பிற நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றுவேன் என கூறுவது போன்ற பல சர்ச்சை கருத்துக்களுக்கு சொந்தக்காரராக டொனால்ட் ட்ரம்ப் திகழ்ந்தார்.

ஆனாலும் குடியரசு கட்சியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் தோற்கடித்து குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் தான் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருப்பது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு காரணம்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ ஃபிடனும் போட்டியிடயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிபர் ட்ரம்ப், பிற நாடுகளின் உதவிகளை நாடுவதாக விசில் ப்ளோவர் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றங்களைச் சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்) குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைன் நாட்டில் புரிஸ்மா ஹோல்டிங் (Burisma Holdings) என்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில், 2014-ம் ஆண்டு ஜோ ஃபிடன் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன் ஹண்டர் ஃபிடன், புரிஸ்மா நிறுவனத்தின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது, இந்நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கை விசாரித்த அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

அதில் ஜோ ஃபிடனின் தலையீடு இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஜோ ஃபிடன் மற்றும் அவரின் மகன் ஹண்டரைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு (Volodymyr Zelensky) டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதிபரின் இந்த செயல் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாக இருப்பதாக ஜனநாயக கட்சியினர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போர்கொடி தூக்கினர். அதுவே அதிபர் ட்ரம்பின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட காரணமாக இருந்துள்ளது.

செனட் சபையில் நிறைவேறுமா தீர்மானம்:

அமெரிக்க செனட் சபையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் அதிபர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட 66 உறுப்பினர்களின் ஓட்டுகள் தேவை. ஆனால் ஜனநாயக கட்சியின் சார்பில் 47 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 53 உறுப்பினர்களும் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள். எனவே குடியரசு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப்பின் பதவி பறிபோகும்.

கடந்தகால வரலாறு:

கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை மூன்று அதிபர்கள் மீது மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒருவர் கூட அமெரிக்க செனட் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1865ம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாண்சன். ஆபிரகாம் லிங்கனின் மறைவிற்கு பிறகு அதிபராக பொறுப்பேற்ற ஆண்ட்ரூ ஜாண்சன், போர்காலத்தில் செயலாளராக பதவி வகித்த எட்வின் ஸ்டன்டன் என்பவரை பதவி நீக்கம் செய்தார். இதானால் அதிபர் மீது சர்ச்சைகள் எழுந்தன. மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றும் புகார்கள் எழுந்தன. இதனால் அதிபர் ஜண்சன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதிபர் ஜாண்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினாலும் செனட் சபையில் எதிர்கட்சியாக இருந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் ஜாண்சனுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவருடைய பதவி தப்பியது.

அதன்பின்னர் கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு 1972ம் ஆண்டு, தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்திற்கும் அப்போது அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது, அதற்கு ஆதாரமாக வெள்ளை மாளிகையில் தொலைப்பேசி பதிவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிபர் அந்த தொலைப்பேசி பதிவுகளை விசாரணை குழுவிடம் ஒப்படைக்க மறுத்ததால் அவர் மீது இருந்த சந்தேகம் வலுப்பெற்றது. இதனால் நிக்சன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது, இதில் நாடாளுமன்றத்தில் வெறும் 4 உறுப்பினர்களை தவிர மீதமுள்ள 410 உறுப்பினர்களும் நிக்சனுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் அந்த தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் செனட் சபையில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் நிக்சன்.

அதன் பின்னர் 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தார். அப்போது அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. குறிப்பாக பவுலோ ஜோன்ஸ் என்ற பெண் கிளிண்டன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளில் எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் கிளிண்டன் மறுத்து வந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை 1998ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது வெள்ளை மாளிகையில் பணியில் இருக்கும் மோனிக்கா லீவென்ஷிகியுடன் கிளிண்டன் முறை தவறிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்த கிளிண்டன் பின்னர் ஒப்புக்கொண்டார்.

மேலும் கிளிண்டனுக்கும் மோனிக்காவிற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் மக்கள் மத்தியில் பரவியது. இது கிளிண்டனுக்கு மேலும் அவப்பெயரை கொண்டு சேர்த்தது. இதனால் அவர் மீது 1998ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றாலும் செனட் சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 45பேரும் எதிராக 55பேரும் வாக்களித்ததால் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் பதவி தப்பியது.

அதன்பின்னர் இப்பொழுது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுள்ளது. ஆனால் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் ட்ரம்புக்கு எதிராக 66 பேர் வாக்களித்தால் மட்டுமே ட்ரம்பின் பதவியை நீக்க முடியும். மேலும் குடியரசு கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக இருப்பதால் டொனால்ட் ட்ரம்ப்பை பதவிநீக்கம் செய்வது கேள்விக்குறியே.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

6 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

7 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

7 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

7 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

7 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

7 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

18 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை