Skip to main content

அதிகரிக்கும் தற்கொலை; அதிர்ச்சியில் இளைஞர்கள்..!

January 21, 2020

ராபின்சன் ராஜரத்தினம்

கட்டுரையாளர்

Image

கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,34,516 பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண பதிவேடு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டை விட 2018ம் ஆண்டில் 3.6 சதவீதம் அதிகமாக தற்கொலைகள் நடந்துள்ளன.

சர்வதேச அளவில் தற்கொலை:

ஒருவர் தன்னுடைய வாழ்க்கை மீதோ, அல்லது சமூகத்தின் மீதோ ஏற்படும் வெறுப்பின் உச்சமாகவோ அல்லது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமலோ வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். இப்படி தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை உலகளவிலும், இந்திய அளவிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஓர் ஆண்டில் சராசரியாக 8,00,000 லட்சம் மக்கள் சர்வதேச அளவில் தற்கொலை செய்வதாக உலக சுகாதார நிறுவனம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மலேரியா, மார்பக புற்றுநோய், கொலை மற்றும் போரினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகமாகும்.

கண்டங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெற்கு ஆசிய நாடுகளிலேயே அதிகமாக தற்கொலைகள் நடப்பது தெரியவந்துள்ளது. அதிலும் இந்தியாவிலேயே அதிக அளவு தற்கொலை நடப்பாதகவும் கணக்கெடிப்பின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.

இந்தியாவில் தற்கொலைகள்:

இந்நிலையில் 2018ம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் அறிக்கையை தேசிய குற்ற ஆவணப் பதிவேடு வெளியிட்டுள்ளது. இதில் தற்கொலைக்கான காரணங்கள், வயது மற்றும் பல்வேறு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகமானது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அடிப்படையில் தற்கொலை விவரங்களை தெரிவித்துள்ளது. இதில் மாநிலங்களில் அளவில் மகாராஷ்டிராவும் யூனியன் பிரதங்களில் டெல்லியும் முதலிடத்தில் உள்ளன.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் மட்டும் 17,972 பேரும், தமிழ்நாட்டில் 13,896 பேரும், மேற்கு வங்கத்தில் 13,255  பேரும், மத்திய பிரதேசத்தில் 11,775 பேரும், கர்நாடகாவில் 11,561 பேரும் தற்கொலை செய்துள்ளனர். முறையே மகாராஷ்டிரா (13.4%), தமிழ்நாடு (10.3%), மேற்கு வங்கம் (9.9%), மத்திய பிரதேசம் (8.8%), கர்நாடகா (8.6%), ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. மேலும் ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தில் இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் தற்கொலைகள் மட்டும் 50.9% ஆகும். மீதமுள்ள 49.1% தற்கொலைகள் மீதமுள்ள 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 3.6 சதவீதம் பேர் மட்டுமே தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறையாக மகாராஷ்டிரா முதலிடமும் தமிழ்நாடு இரண்டாவது இடமும் வகிக்கிறன.

யூனியன் பிரதேசங்களில் தற்கொலை:

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் தொகைக் கொண்ட டெல்லியில் மட்டும் அதிகபட்சமாக 2,526 பேர் தற்கொலை செய்துள்ளனர். அடுத்தப்படியாக புதுச்சேரியில் 500 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒட்டு மொத்த தற்கொலை விகிதத்தில் யூனியன் பிரதேசங்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 2.6% உள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 21,408 பேர் இந்தியாவில் உள்ள மாநகரங்களில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கான காரணங்கள்:

குடும்ப பிரச்சினை, உடல்நலக்குறைவு, திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், போதைப்பொருள் பழக்கம், கடன் மற்றும் வங்கி பிரச்சினை, தேர்வில் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், சுய தொழில் மற்றும் வேலையில் பிரச்சினை, சொத்து தகராறு, ஏழ்மை, நெருங்கிய உறவினர்களின் மரணம், தகாத உறவு பிரச்சினை, சமுகத்தில் மரியாதை குறைவு, குழந்தையின்மை மற்றும் பிற காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை:

இதில் அதிகப்பட்சமாக குடும்ப பிரச்சினை காரணமாகவே 30.4%  பேரும், உடல்நலக்குறைவால் 17.7% பேரும், திருமண பிரச்சினையால் 6.2% பேரும், போதை பழக்கத்தால் 5.3% பேரும் காதல் தோல்வியால் 4%  பேரும், வேலையில்லா திண்டாட்டத்தால் 2% பேரும், சுய தொழிலில் ஈடுபட்டவர்களில் 1.3%  பேரும் தற்கொலை செய்துள்ளனர்.  

Family

வேலையில்லா திண்டாட்டம்: 

தேசிய குற்ற ஆவண பதிவேடு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளைவிடவும் வேலையில்லாதவர்களும், சுயதொழில் செய்து வந்தவர்களுமே அதிக அளவில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Unemploy

தேசிய குற்ற ஆவணத்தின் படி, 2018ம் ஆண்டில் மட்டும் 12,936 வேலையில்லாதவர்களும், 13,149 சுய தொழில் செய்தவர்களும் தற்கொலை செய்துள்ளனர். இதன்படி வேலையில்லாதவர்களைவிட சுய தொழில் செய்துவந்தவர்களே அதிகம் தற்கொலை செய்துள்ளனர். மொத்தமாக 26,085 பேர் தற்கொலை செய்துள்ளனர். வேலையில்லாதவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக  35 பேரும் சுயதொழில் செய்தவர்களில் 36 பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையும் தெரியவந்துள்ளது.  சுயதொழில் செய்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த நிதி பிரச்சனையே அவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தற்கொலை: 

2018ம் ஆண்டு 1,707 அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலை விகிதத்தில் 1.3% ஆகும். மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த சதவிகிதத்தில் 6.1% ஆகும். பொதுத்துறை நிறுவனங்கள் நிர்வகிக்கும் துறைகளில் 2,022 (1.5%) பேர் தற்கொலை செய்துள்ளனர்.  மேலும் மாணவர்களில் 10,159 பேரும் வேலையில்லா திண்டாட்டத்தால் 12,936 பேரும், சுய தொழில் செய்தவர்களில் 13,149 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை: 

மேலும் அந்த பட்டியலின் அடிப்படையில், 2018ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் சேர்த்து மொத்தமாக 10,349 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, கோவா, சண்டிகர், டாமன் டையூ, டெல்லி, லட்சத்தீவு, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகளை விடவும் சுய தொழில் செய்பவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Farmers

ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை விகிதம்:

1,34,516 தற்கொலைகளில், 92,114 ஆண்களும், 42,391 பெண்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்களில் மட்டும் 26,589 தினக்கூலிகளும், 12,175 சுயதொழில் செய்தவர்களும், 10,687 வேலையில்லாதவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 

பெண்களில் 22,937 குடும்பத் தலைவிகளும், 4,790 மாணவிகளும், 3,535 தினக்கூலிகளும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட திருநங்கைகளில் 3 தினக்கூலிகளும், சுயதொழில், மாத வருமானத்திற்கு வேலை செய்தவர் மற்றும் வேலையில்லாதவர் என தலா ஒருவர் தற்கொலை செய்துள்ளனர். 

hand

தற்கொலை செய்து கொண்டவர்களின் பொருளாதார நிலை:

1 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் கொண்டவர்களில் 88,986 (66.2%) பேரும், 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களில் 39,080 (29.1%) பேரும் தற்கொலை செய்துள்ளனர். இதன் மூலம் வருமானம் குறைவால் பொருளாதார சிக்கலில் இருப்பவர்களே அதிகம் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்கொலை செய்து கொண்டவர்களின் கல்வி நிலை: 

பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களில் 31,757 (23.6%) பேரும், இடைநிலைக் கல்வி 26,252 (19.5%) பேரும், தொடக்க கல்வி 23,048 (17.1%) பேரும், மேல்நிலைக் கல்வி பயின்றவர்களில் 22,076 (16.4%) பேரும், கல்வியறிவு அற்றவர்களில் 17,026 (12.7%) பேரும் தற்கொலை செய்துள்ளனர். மேலும் பட்டபடிப்பு படித்தவர்களில் 4,437 (3.3%) பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Suicide image

தற்கொலை செய்துகொண்ட விதம்: 

தற்கொலை செய்பவர்களில் அதிகபட்சமாக, 69,306 (51.5%) பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர். இரண்டாவதாக 35,862 (26.7%) பேர் விஷம் அருந்தியும், நீரில் மூழ்கி 6,579 (4.9%) பேரும், 5,950 (4.4%) தீக்குளித்தும் தற்கொலை செய்துள்ளனர். மேலும் தூக்கமாத்திரை, தனக்குத்தானே காயம் ஏற்படுத்து, உயர்ந்த இடத்தில் இருந்து குதிப்பது, வாகனங்களில் விழுவது, மற்றும் சில வழிகளின் மூலமும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கமாக விவசாயிகளின் தற்கொலையே பெரும் பிரச்சினையாக பேசப்பட்டு வரும் சூழலில் 2018ம் ஆண்டு 10,349 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 விவசாயிகளும், 4,586 விவசாய கூலிகளும் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளைவிட வேலையில்லா திண்டாட்டத்தாலும், சுய தொழில் செய்பவர்களும் அதிக அளவில் தற்கொலை செய்துள்ளது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 45 வயதிற்கு உட்பட்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

6 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

7 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

7 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

7 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

7 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

7 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

18 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை