Skip to main content

மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் - அமெரிக்கா பிரச்சினை..!

January 12, 2020

ராபின்சன் ராஜரத்தினம்

கட்டுரையாளர்

Image

அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை? 

கடந்தகால வரலாறு: 

கடந்த 80 ஆண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே அரசியல் ரீதியான தொடர்பு இருந்துவருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஈரானில் அதிபர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தே வந்துள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கு ஈரான் அளிக்கும் ஆதரவு மூலம் ஈரானின் எண்ணெய் விற்பனையும் உலகளவில் கொடி கட்டி பறந்தது. ஆனால் 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் அப்போதைய அதிபர் முகமது ரேஷா பாலவிக்கு எதிராகவும் அவரது முடியாட்சிக்கு எதிராகவும் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன. அபோது போராட்டாக்காரர்கள் ஈரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஊழியர்களை பணையகைதிகளாக 444 நாட்கள் சிறைப்பிடித்து வைத்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் கோபத்தை தூண்டினாலும் ஈரானின் மீது அமெரிக்கா அப்போது போர் தொடுக்கவில்லை. பின்னர் 1981ம் ஆண்டு முடியாட்சி நிறைவடைந்து ஈரானில் சையது அலி ஹூசைன் காமேனி தலைமையில் குடியாட்சி தொடங்கியது. 

அதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு நட்பாக இருந்த ஈரான் அதன் பிறகு அமெரிக்காவிற்கு எதிரியானது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான பல பொருளாதார உறவுகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் 1981ம் ஆண்டு எண்ணெய் விற்பனையில் போட்டியாக இருந்த அண்டை நாடானா ஈராக்குடன் ஈரானிற்கு போர் மூண்டது. இந்த போரில் ஈராக்கிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும், ஈரானிற்கு லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளும் ஆதரவளித்தன. 

1980

அந்த போர் முடிவுக்கு வந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் ஈரானின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் 290 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதில் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட ஈரானிய மக்களே அதிகமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, போர் விமானம் என்று நினைத்து தவறுதலாக பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போர் 1988ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. 

2000ம் ஆண்டில் ஈரானுக்கு எதிரான நாடுகள் ஒன்றிணைந்து, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அணு ஆயுத தளவாடங்களை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதனால் ஈரானின் மீது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை பொருளாதார தடை விதித்தன. மேலும் 2002ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், வட கொரியா மற்றும் ஈராக்குடன் இணைந்து, ஈரானை தீய சக்திகளின் பிறப்பிடம் என பிரகடனம் செய்தார். 

ஒபாமா அதிபரானபோது:

பின்னர் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவும், ஈரானில் புதிதாக பதிவியேற்றிருந்த ஹாசன் ரூகானியும் தொலைப்பேசியின் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையின் நீட்சியாக 2015ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஈரான்.

obama

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருப்பது என்ன? 

அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி, ஈரான் 2031ம் ஆண்டு வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது. மேலும் அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் போன்றவற்றையும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் ஈரானில் எத்தனை அணு சக்தி மையங்கள் உள்ளன என்பதை வெளிப்படையாக  தெரிவிக்க வேண்டும். அந்த அணு சக்தி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகமும், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டுக்கு ஒருமுறை ஈரானில் ஆய்வு நடத்துவார்கள். அப்படி ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அணு ஆயுத தளவாடங்கள் இருப்பதாக சந்தேகம் ஏற்படும் இடங்களில் எல்லாம் ஆய்வு செய்ய ஈரான் அரசு அனுமதிக்க வேண்டும் போன்றவை ஒப்பந்தங்கங்களில் இடம்பெற்றிருந்தன. 

weapon

டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு:

ஆனால் அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சிக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இறுக்கமான போக்கையே கடைபிடித்தார். மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் ஈரானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாகவும் அறிவித்தார். பின்னர் ஈரான் மீது 2018ம் ஆண்டு பொருளாதார தடையை வித்தித்து, அந்நாட்டில் இருந்து யாரும் எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டாலும் அவைகளும் ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெயின் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டன. 

Donald

பின்னர் 2019ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓமன் நாட்டின் 6 எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும் அதே ஆண்டு ஜூன் மாதம் 20 தேதி ஈரானின் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி அமெரிக்காவின் ராணுவ ட்ரோனை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. 

சுலைமானி கொலை:

பின்னர் 2020 ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஈரானின் இரண்டாவது பெரிய தலைவராக கருதப்பட்ட ராணுவ தளபதி குசேம் சுலைமாணியை ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சுட்டுக்கொன்றது. மேலும் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு துணை போவதகாவும் அணு ஆயுதங்களை சட்ட விரோதமாக தயாரிப்பதாகவும் அமெரிக்கா காரணம் கூறியது.  இந்த சம்பவத்திற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. மேலும் ஈரானில் இருக்கும் 5000 அமெரிக்க படை வீரர்களையும் தீவிரவாதிகள் என ஈரான் அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Soleimani

உக்ரைன் விமானம் தாக்குதல்:

இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஈரான் நாட்டின் தெஹரான் விமான நிலையத்திலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் வானில் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 176 பேர் உயிரிழந்தனர். முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாகவே செய்திகள் பரவின. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டின. இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்து வந்த ஈரான் நேற்று (11-01-2020) மனித தவறினால் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்தது.

Ukraine

உலக நாடுகள் கண்டனம்

இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஈரானிலும் அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தாம் அதிபர் ஆனது முதல் ஈரான் மக்களுக்கு ஆதரவாக இருந்து வந்ததாகவும், அது தொடரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் உலக நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாக அந்நாட்டிற்கான பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா?

உலகளவில் ஈரானின் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நடவடிக்கைகளும் போர் மூளுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பதற்றத்தை நிரூபிக்கும் விதமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் மூன்றாம் உலகப்போர் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. மேலும் உலக அரசியலையை கவணிக்கும் பல தலைவர்களும் மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற கவலையையும் தெரிவித்தனர். மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவரான போப்பாண்டவர், அமெரிக்காவும் ஈரானும் போர் பதற்றத்தை ஏற்படுத்தாமல் பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். 

2020

ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்துவருகின்றது. மேலும்  ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போலவும், முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். மேலும் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்பதால் போர் ஏற்பட்டால் இரண்டு நாடுகளுக்குமே பேரிழப்பு ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

6 hours ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

16 hours ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

16 hours ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

1 day ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

1 day ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 day ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 day ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

1 day ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

1 day ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

2 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

2 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

2 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

3 days ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

3 days ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

3 days ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

3 days ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

3 days ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

3 days ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

3 days ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

3 days ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

3 days ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

3 days ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

3 days ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

4 days ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

4 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

4 days ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

4 days ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

4 days ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

4 days ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

5 days ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

5 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

5 days ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

5 days ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

5 days ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

6 days ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

6 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

6 days ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

6 days ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

6 days ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

6 days ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

6 days ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

6 days ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

6 days ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

6 days ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

6 days ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

6 days ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

6 days ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago

தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

1 week ago

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது! - தமிழக முதல்வர்

1 week ago

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்!

1 week ago

கொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது! - WHO தலைவர்

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

எல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.

1 week ago

கொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

1 week ago

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.

1 week ago

தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

1 week ago

உயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி

1 week ago

திமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு! - மு.க.ஸ்டாலின்

1 week ago

“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்

1 week ago

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

1 week ago

இந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

1 week ago

கமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது! - ட்ரம்ப்

1 week ago

கொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு!

1 week ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு!

1 week ago

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

1 week ago

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா!

1 week ago

தமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை!

1 week ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது! - மருத்துவமனை அறிக்கை

1 week ago

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

1 week ago

நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது!

1 week ago

கிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 72,775 பேர் உயிரிழந்துள்ளனர்!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை