Skip to main content

தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

July 06, 2020
Image

பிரவின் மாரியப்பன்

கட்டுரையாளர்

Image

'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது' என்பது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். அதனைப்போலவே, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ எதுவாயினும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். அத்துணை நீண்ட நெடிய ஆராய்ச்சியின் நோக்கம், "ஓர் மருந்து, நோயினை குணமாக்கினால் மட்டும் போதாது, அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வேறு ஒரு நோயினை உண்டாக்கிவிடக்கூடாது" என்பதுதான்.

 

கடந்த நூறு ஆண்டுகளில் நம் தலைமுறை கண்டிராத பெருந்தொற்றாக அமைந்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று. ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ, நகரத்திலோ மட்டும் பரவும் நோயினை endemic என்றும், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் பரவும் நோயினை epidemic என்றும், உலகம் முழுமையும் பரவும் நோயினை pandemic என்றும் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இத்தொற்று கண்டறியப்பட்ட போதும், கொரோனா வைரஸ் ஒரு pandemic என உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11 தேதியன்று அறிவித்தது. 

 

இருந்தபோதிலும், கொரோனா வைரஸின் மரபியல் மூலக்கூறு கடந்த ஜனவரி மாதமே கண்டறியப்பட்டு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வேகமாக பயணிக்க தொடங்கியிருக்கின்றன. கடந்த வாரம் ஜெர்மனியின் BioNTech நிறுவனமும் அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆரம்பகட்ட மனித பரிசோதனைகளில் நல்ல முடிவை தந்துள்ளதாக அறிவித்தன. தற்போது ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்ஸின்' என்னும் தடுப்பு மருந்தின் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக தெரிவிக்க, அதனை விரைவாக மனிதர்களுக்கு பரிசோதித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. 

 

இவ்வளவு குறுகிய காலத்தில் இது சாத்தியமா என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஓர் நோய்க்கான தடுப்பு மருந்து எப்படி உருவாகிறது என்பதனை விரிவாக பார்ப்போம்.


தடுப்பு மருந்துகளின் வரலாறு 
 

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் பல்வேறு குழுக்களில் தடுப்பு மருந்து பயன்பாடு (immunisation) வழக்கத்தில் இருந்து வந்தாலும், 1796ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான எட்வர்ட் ஜென்னர், தான் உருவாக்கிய பெரியம்மை (smallpox) நோய்க்கான தடுப்புமருந்தை, 13 வயது சிறுவன் ஒருவனுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில், அச்சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவானதை கண்டறிகிறார். 

அவர் கையாண்ட ஆராய்ச்சி மற்றும் மருத்துவமுறை உலகெங்கிலும் ஏற்கப்பட்டு, "தடுப்பு மருந்துகளின் தந்தை" என போற்றப்படுகிறார் எட்வர்ட் ஜென்னர். அடுத்த இருபது ஆண்டுகளில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் பெரியம்மையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தாமதமானது.     

1950களின் மத்தியில் உலக சுகாதார அமைப்பின் முயற்சியால்  வேகமெடுத்த பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கை, 1980ம் ஆண்டு அதன் இலக்கை எட்டியது. 

1980களின் இறுதியில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக உருவெடுத்தது இந்தியா. 

ஆனால் 1980களின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட ஹெச்ஐவி எய்ட்ஸ் வைரஸ் நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் உயிரிழுந்துள்ள நிலையில், நான்கரை கோடிக்கும் அதிகமானோர் ஹெச்ஐவி எய்ட்ஸ் வைரஸ் தொற்றுடன் வாழ்ந்து வருகிற நிலையிலும், அதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை.   

1945ம் ஆண்டு கண்டறியப்பட்ட mumps வைரசுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 1970ம் ஆண்டு வாக்கில் mumps வைரஸ் பெரும்பான்மையாக ஒழிக்கப்பட்டது.

தடுப்பு மருந்துகள் எப்படி உருவாகின்றன

Stage 1: Drug Discovery & Development 

ஒரு நோய்க்கான மருந்து, பல்வேறு மூலக்கூறுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. எப்படி பாம்பின் விஷத்தை அதனை கொண்டே முறிப்பது போல, எப்படி வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஒரு நோயினை தடுக்கும் தடுப்பு மருந்து, அந்நோய் உண்டாக்கும் தீங்குயிரி மூலமே  உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட நோயினை உண்டாகும் தீங்குயிரியின் செல்களிலுள்ள புரதக்கூறு, மரபணுக்கூறு, போன்ற எண்ணற்ற பாகங்களில் இருந்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் எந்த வகையான வேதிப்பொருளுக்கு அதிக நோய் நீக்கும் மருத்துவ  குணமிருக்கிறதோ அதனை கண்டறிவது தான் முதல்நிலை. இந்த முதல் நிலை ஆராச்சியை செய்து முடிக்க குறைந்தது ஆறு முதல் பன்னிரண்டு மாத காலம் ஆகலாம். 

Stage 2: Pre-clinical Research (6 மாதம் - சில ஆண்டு காலம்)  

ஆரம்பகட்ட முதல்நிலை பரிசோதனைகளில் சாதகமான முடிவுகள் வரப்பெற்ற மருத்துவ குணமுடைய வேதிப்பொருளை  திசுக்கள், செல்கள், சோதனைக்கூட எளிய விலங்குகள் முதல் பாலூட்டிகள் வரை சோதித்து பார்த்தல் இரண்டாம் கட்ட ஆராய்ச்சி. இந்த இரண்டாம் கட்ட ஆராய்ச்சி ஆறு மாதம் முதல் சில ஆண்டுகள் வரை நீளும்.   

Stage 3: Clinical Research (Clinical Trials Phase 1,2,3,4)

திசுக்கள், செல்கள் மற்றும் விலங்குகளிடம் சோதிக்கப்பட்டு சாதகமான முடிவுகள் வரப்பெற்றபின், குறிப்பிட்ட அந்த வேதிப்பொருள் நான்கு நிலைகளில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும். 

 

Clinical trials Phase 1: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான நூற்றுக்கும் குறைவான தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு, மனித உடல் அந்த வேதிப்பொருளை எப்படி எடுத்துக்கொள்கிறது, எப்படி செரிமானம் ஆகிறது, உடலிலிருந்து  எப்படி வெளியேற்றுகிறது, எவ்வாறான வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி நோயினை குணப்படுத்துகிறது, எந்த அளவில், எந்த முறையில் கொடுப்பது, எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்து ஆராயப்படும். 

 

Clinical trials Phase 2: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில நூறு தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த இரண்டாம் கட்ட சோதனையில், செலுத்தப்பட்ட மருந்தினால் யாருக்கேனும் ஒவ்வாமை அல்லது  வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்றும், அம்மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயப்படும். 

 

Clinical trials Phase 3: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில நூறு நபர்கள் முதல் சில ஆயிரம் தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த மூன்றாம் கட்ட சோதனையில், மருந்தின் செயல்திறன் மற்றும் பாதகமான எதிர்விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பது குறித்து  ஆராயப்படும். 

 

Clinical trials Phase 4: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில ஆயிரம் தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த நான்காம் கட்ட சோதனையில், பல்வேறு இனக்குழுக்களிலும் / பல்வேறு வயதுடையோரிடமும் / அனைத்து பாலினத்தினரிடமும் மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, பாதகமான எதிர்விளைவுகள் உள்ளதா, என அனைத்தும் மீண்டும் ஆராயப்படும்.    

      

ஒரே மருந்து மனிதர்களின் உடல்நிலை, வயது, பாலினம், வாழும் பகுதி ஆகியவற்றால் வெவ்வேறான முடிவுகளை தருமாயின் அதனை அங்கீகரிக்க முடியாது என்பதாலேயே இதனை கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. மனிதர்களிடம் பரிசோதித்து முடிவினை அறிய குறைந்தது ஓர் ஆண்டு முதல் சில ஆண்டுகள் ஆகலாம். 
         

Stage 4: Drug Approval (1-2 ஆண்டு காலம்) 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகள் ஒவ்வொன்றின் போதும், USFDA (USA), MHRA (UK), TGA (Australia), CDSCO (India), HEALTH CANADA (CANADA), World Health Organization (WHO), International Conference on Harmonization (ICH), என அந்தந்த நாடுகளில் உள்ள  அமைப்புகளிடம் முன்னனுமதி பெறுதல் அவசியம். ஒவ்வொரு நிலையிலும் பெறப்பட்ட தரவுகள் மற்றும் முடிவுகளை நுணுக்கமாக ஆராய்ந்த பின்னர், உரிய அமைப்புகள் அதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதியை பெற ஓர் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் ஆகலாம். 

 

Stage 5: Mass Production & Monitoring (Continuous process)

உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னர் சிறந்த உற்பத்தி முறைகளை கையாண்டு, பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தக தயாரிப்பை தொடங்க அனுமதி பெற்ற பின்னர், குறிப்பிட்ட மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். சில ஆயிரம் நபர்களிடம் பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த மருந்துகள், உலகளவில் பயன்படுத்தப்படும் போது வேறு ஏதேனும் விளைவுகள் ஏற்படுத்துகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். மருந்தினை கண்டுபிடிக்கும் நிறுவனம் 
அறிவுசார் சொத்துரிமை பெற முடியும். 

ஓர் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வர குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம். 

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சற்று விரைவாகவும், குறைந்த காலத்திலும் கூட உருவாக்கப்படலாம். 

ஒரு பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் அசாதாரண சூழலில், அரசோ / அமைப்போ குறைந்தபட்சமாக, மருத்துவ குணமுடைய வேதிப்பொருளின் ளின் TOXICITY STUDIES, PHARMACO-DYNAMICS, PHARMACO-KINETICS, CLINICAL TRIALS உள்ளிட்ட சோதனை முடிவுகளை ஏற்றுக்கொண்டு, பெருந்தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, POSSIBLE BENEFITS OUTWAYS THE RISK என்ற அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

இறுதியாக, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ எதுவாயினும், பக்கவிளைவுகள் அல்லது பாதகமான எதிர்விளைவுகள் ஏதுமின்றி, கொரோனா போன்றதொரு பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.  

*இக்கட்டுரையில் உள்ள குறிப்புகள் மற்றும் தகவல்கள், WHO, USFDA உள்ளிட்ட வலைதளங்களில் இருந்து பெறப்பட்டவை. 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

7 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

8 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

8 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

9 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

9 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

9 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

19 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை