Skip to main content

உரிமைக்காக உயரும் கருப்பு

July 11, 2020
Image

ஜெய்லானி

ஊடகவியலாளர்

Image

கொரோனா அச்சுறுத்தலை மீறி மீண்டும் தொடங்கியிருக்கும் கிரிக்கெட் போட்டி வேறொரு விஷயத்திற்காக கவனம் ஈர்த்திருக்கிறது.  அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டிற்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். தங்கள் ஜெர்சியில் BLACK LIVES MATTER என்ற வாசகங்களை தாங்கி விளையாடியதோடு கறுப்புக் கையுறைகளை அணிந்த கைகளை உயர்த்தியிருக்கிறார்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள். 

 

ஜார்ஜ் பிளாய்டின் வார்த்தைகளை என் நரம்புகளில் உணர்ந்தேன் என்றிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர்.  விளையாட்டுக்களங்கள் மனித உரிமைக்கான குரலை உரக்க எழுப்பும் போராட்டக் களங்களாவதும் கறுப்புக் கையுறைகள்   உயர்த்தப்படுவதும் புதிதல்ல. நிறவெறியினாலும் இனவெறியினாலும் மக்கள் ஒடுக்கப்படுவதும் அதற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் குரல் கொடுப்பதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. 

 

ஒரு கலைஞன் அடிமையாக இருப்பது, அல்லது அதிகாரத்திற்கு எதிராக போராடுவது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அமெரிக்க மக்கள் கலைஞர் பால் ராப்சன். அந்த வரையறைக்குள் விளையாட்டுக்களும், விளையாட்டு வீரர்களும் அடங்குவர். ஹிட்லருக்கும், ரூஸ்வெல்டையும் ஒரே மாதிரி எதிர்கொண்ட ஜெஸ்ஸி ஓவன்ஸ் தொடங்கி, பிளாய்டின் வலியை தன் நரம்புகளில் உணர்ந்த ஹோல்டர் என மக்கள்  பக்கம் நிற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்  நீள்கிறது.

 

1936ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப்பதக்கம் வென்றார். ஆரிய இனமே உயர்ந்தது என்று இனத்தூய்மைவாதம் பேசிய ஹிட்லரால் ஒரு நீக்ரோ தங்கப்பதக்கம் வென்றதை சகித்துக் கொள்ள முடியாதததால், பதக்கமளிக்கும் போது ஜெஸ்ஸி ஓவன்ஸோடு கைகுலுக்காமல் புறக்கணித்தார். ஹிட்லரை எதிர்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவும் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால் பதக்கம் வென்று அமெரிக்கா திரும்பிய ஜெஸ்ஸி ஓவன்ஸை வரவேற்க கூட ஆள் இல்லை. அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஜெஸ்ஸி ஓவன்ஸை சந்திக்க மறுத்தார்.“என்னை ஹிட்லர் தவிர்த்தார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அதையே செய்கிறார்.” என்று தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார் ஓவன்ஸ்.  “என்னால் பேருந்தின் முன்பக்கம் இப்போதும் போக முடியவில்லை; நான் என் நிறத்தால் எடை போடப்படுகிறேன். நினைத்த இடத்தில் என்னால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை” என ஒடுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் குரலாக ஒலித்தார் ஜெஸ்ஸி ஓவன்ஸ்.

 

இதுபோன்ற இன்னும்  பலரின் குமுறல்கள் ஒருநாள் விளையாட்டுக்களத்தில் கறுப்புக் கையுறைகளாக உயர்ந்தன. 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஆப்ரோ அமெரிக்கர்களான டாம் ஸ்மித் தங்கப் பதக்கத்தையும், ஜான் கார்லோஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் நார்மன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். பரிசளிப்பு விழாவின் போது டாம் ஸ்மித்தும் ,ஜான் கார்லோஸும் செய்த செயல் உலகின் கவனத்தை ஈர்த்தது.  பதக்க மேடையில் நின்ற போது ஒரு கையில் கறுப்புக் கையுறையும், இன்னொரு கையில் காலணியையும் மாட்டிக் கொண்டு நின்றனர். கறுப்பின மக்களின் துயரங்களை உலகிற்குச் சொல்வதற்காக இவ்வாறு அவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. பதக்கம் வழங்கிய போது கையுறை மற்றும் காலணி அணிந்த கைகளை உயர்த்திக் காட்டினர்.

 

அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கையுறை அணிந்த கையை மட்டும் உயர்த்திக் காட்டினர். ஒருகட்டத்தில் ஆப்ரோ அமெரிக்க தொழிலாளர்களின் வறுமையை உணர்த்தும் விதமாக தனது மேல்சட்டையையும் கழற்றினார் ஜான் கார்லோஸ்.  அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டாம் ஸ்மித் ”நான் வெற்றிபெற்றால் அமெரிக்கன் என்பார்கள், தோற்றுவிட்டால் கறுப்பின அமெரிக்கன் என்பார்கள், அவர்களுக்கு எதிராக எதையாவது செய்தால் நீக்ரோ என்பார்கள். நாங்கள் கறுப்பர்கள்தான், நாங்கள் கறுப்பாய் இருப்பதில் பெருமை கொள்கிறோம். அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் நாங்கள் இன்று செய்ததை புரிந்து கொள்வார்கள்” என்றார். நிறவெறிக் கொடுமைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இருவரின் அமைதிப் போராட்டம் உலகை உலுக்கியது.

 

இப்படிப்பட்ட போராட்டங்களை அதிகார வர்க்கங்கள் எப்போதும் ரசிக்காது. டாம் ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகிய இருவரையும் அணியிலிருந்து நீக்கிய அமெரிக்க தடகள சங்கம் அவர்கள் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதித்தது. இந்தப் போராட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு நபர்  பீட்டர் நார்மன். டாம் ஸ்மித்தும், கார்லோஸும் போராடிய போது மனித உரிமை சின்னத்தை சட்டையில் அணிந்து ஆதரவு தெரிவித்த பீட்டர் நார்மன் பின்னாளில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால்  மிகக் கொடூரமாக பழி வாங்கப்பட்டார். 1972ம் ஆண்டின் ஒலிம்பிக்கிற்கு 13 முறை தகுதி பெற்ற போதும் அவரை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா அனுமதிக்கவில்லை.  2000ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் போது மிகக் கடுமையாக அவமதிக்கப்பட்டார் நார்மன். 

 

ஆஸ்திரேலியா சார்பில் பதக்கம் வென்றவர்கள் எல்லாம் அணிவகுத்த போது அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள நார்மனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் வரலாறு வேறு வகையில் திரும்பியது. சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மனித உரிமைக்கான தூதராக அணிவகுத்துச் செல்ல நார்மனுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் ஜான்சன் நார்மனைக் கட்டியணைத்து நீங்கள் தான் என்னுடைய ஹீரோ எனப் புகழாரம் சூட்டினார்.  BLACK POWER SALUTE என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை HUMAN RIGHTS SALUTE என  தனது சுயசரிதையில் குறிப்பிட்டார் டாம் ஸ்மித். 

 

கறுப்புக்  கையுறைகள் உயர்த்தப்படுவதை போல  I CANT BREATHE என்பதும் புதிதல்ல. ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே 2014ம் ஆண்டும் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. நியூயார்க் நகரில் சட்டவிரோத சிகரெட் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு எரிக் கேமர் என்பவரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றது. அப்போது எரிக் மரணமடைந்தார். காவல்துறையினர் கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. 

 

இறப்பதற்கு முன்னர் அவர் பேசிய கடைசி வார்த்தையாக I CANT BREATHE என்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனை எதிர்த்து நடந்த போராட்டங்களில் NBA தொடரின் புகழ்பெற்ற வீரரான லெப்ரான் ஜேம்ஸ் கலந்து கொண்டார். எரிக் கேமரின் கடைசி வார்த்தையான I CANT BREATHE என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீசர்ட்டுகளை அணிந்ததோடு, இந்தக் கொடுமை நடந்த நகரத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால் அந்தப் பிரச்சனைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.  


விளையாட்டரங்கில் அரசியல் குரல்கள் முன்னெடுக்கப்படுவதும், அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒலிக்கும் களங்களாக விளையாட்டுக் களங்கள் மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எரிக் கேமர்களுக்கும், ஜார்ஜ் பிளாய்டுகளுக்குமான உரிமைகள் மறுக்கப்படும் வரை டாம் ஸ்மித்களும், பீட்டர் நார்மன்களும், ஜேசன் ஹோல்டர்களும் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள். மனிதத்தின் குரல்வளைகள் சுவாசிக்க  முடியாமல் நெரிக்கப்படும்  போதெல்லாம் அதனை மீட்க கறுப்புக் கையுறைகள் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

7 hours ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனாவால் பாதிப்பு.

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்வு.

7 hours ago

பாகிஸ்தானின் மேற்கு இஸ்லாமாபாத் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.

8 hours ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல் நலக்குறைவு; சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி.

8 hours ago

மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு என மு.க ஸ்டாலின் விமர்சனம்.

9 hours ago

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே ஒத்திவைப்பு; வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

9 hours ago

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்.

9 hours ago

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி(65) உயிரிழப்பு!

19 hours ago

மாநிலங்களவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

1 day ago

கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!

2 days ago

இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

2 days ago

திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.

2 days ago

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.

2 days ago

வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

2 days ago

இந்தி தெரியவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்.

2 days ago

பத்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்.

2 days ago

ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி!

2 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2 days ago

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு!

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை கடந்தது!

3 days ago

மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

3 days ago

ஆன்லைன் பாடம் புரியாததால் திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

3 days ago

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

3 days ago

பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

3 days ago

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 days ago

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 days ago

வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

4 days ago

சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா!

4 days ago

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

4 days ago

நாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்!

5 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது!

5 days ago

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்!

5 days ago

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்!

5 days ago

கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு!

5 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5 days ago

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு!

6 days ago

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்!

6 days ago

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

6 days ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு!

6 days ago

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

6 days ago

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!

6 days ago

வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு!

1 week ago

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்

1 week ago

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்

1 week ago

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

1 week ago

சட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்!

1 week ago

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

இரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

1 week ago

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி!

1 week ago

பா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா

1 week ago

ஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்? - எல்.முருகன்

1 week ago

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்!

1 week ago

#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

ஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு!

1 week ago

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்!" - பாரதிராஜா

1 week ago

மறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு!

1 week ago

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்!

1 week ago

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது!

1 week ago

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை!

1 week ago

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு!

1 week ago

மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது!

1 week ago

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்!

1 week ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்!

1 week ago

தமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி!

1 week ago

மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

1 week ago

தற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்!

1 week ago

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை!

1 week ago

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு!

1 week ago

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு!

1 week ago

தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

1 week ago

ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!

1 week ago

வடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு?

1 week ago

JEE தேர்வு முடிவுகள் வெளியானது!

1 week ago

நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்!

1 week ago

அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 week ago

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை!

1 week ago

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்!

1 week ago

நடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்!

1 week ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது!

1 week ago

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்!- வெளியுறவு அமைச்சர்

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை