Skip to main content

செருப்பு தொழிலில் தொடங்கி விமான நிறுவனம் வரை: யார் இந்த கோபால் கண்டா?

October 25, 2019
Image

கா. அருண்

கட்டுரையாளர்

Image

ஹரியானாவின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள கோபால் கோயல் கண்டா (வயது 53) யார் இவர்? ஹரியானாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை இழந்து நிற்கும் பாஜகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள கோபால் கோயல் கண்டா எம்.எல்.ஏவிடம் பாஜக ஆதரவை பெறக்கூடாது என்ற கோஷம் வலுவடைய காரணம் என்ன? கோபாலின் ஆதரவு தேவையில்லை என சொந்தக் கட்சிக்குள்ளேயே குரல்கள் எழும்ப என்ன காரணம்? இவர் மீதான குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன? 

செருப்பு தொழில்:

கோபால் கோயல் கண்டா: 1990களில் ‘ஜூபிடர் மியூசிக் ஹோம்’ என்ற கடையை தொடங்கி ரேடியோ பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். பின்னர், சில நூறு ரூபாய் மாத வருமானத்தைக் கொண்டு தனது சகோதரருடன் இணைந்து செருப்பு விற்பனை செய்யும் கடையை சொந்த ஊரான சிர்சாவில் (ஹரியானா) தொடங்கினார். நட்பு வட்டத்தினை பயன்படுத்தி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதன் மூலம் செருப்பு கடையிலிருந்து சொந்தமாக ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினார். 

இவரின் தந்தை முர்ளிதர் ஒரு வழக்கறிஞர், INLD கட்சியின் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவிடம் நெருங்கிப் பழகியவர் என்பதால் கோபால் கண்டாவிற்கு அரசியல் லட்சியம் துளிர்விட்டது, இதற்காகவே ஹரியானாவின் அப்போதைய முதல்வர் பன்சிலாலின் குடும்பத்தினரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் பன்சிலாலின் ஆட்சி கவிழ்ந்த போது அரசியல் செல்வாக்கு நிறைந்த சவுதாலா குடும்பத்தினரிடம் சென்றார். ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலாவிடம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த சமயத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நட்பு கிடைக்கவே கோபால் கண்டாவின் தொழில் சாம்ராஜ்யம் பிரம்மாண்டமாக விரிவடைந்தது. சிர்சாவிலிருந்து குர்கானுக்கு தொழிலை நகர்த்திச் சென்றார். 1997ல் ரியல் எஸ்டேட் தொடர்பான விவகாரங்களிலும் கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபட தொடங்கினார். அப்போதிலிருந்து அவரின் செல்வாக்கு நிலையான வளர்ச்சியை பெறத்தொடங்கியது.

2005ல் கோல்டன் குளோப் ஹோட்டல் நிறுவனத்தை தொடங்கி குர்கானில் ஹோட்டல்கள் மற்றும் மால்களை தொடங்கினார். இதே நேரத்தில் கோவாவில் கேஸினோ தொழிலிலும் ஈடுபட்டார். கேசினோ தொழிலில் ஈடுபடும் 6 உரிமங்களில் கோபாலுடையதும் ஒன்றாகும்.

விமான நிறுவனம்:

2007ம் ஆண்டு சிர்சா மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் MDLR airlines என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார். இருப்பினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரின் விமான நிறுவனம் மூடப்பட்டது. இதனிடையே நேரடி அரசியலில் ஈடுபடுவதில் கோபால் முனைப்பு காட்டினார், சவுதாலா குடும்பக் கட்சியான INLDவின் வாயிலாக அஜய் சவுதாலாவின் நட்பை பயன்படுத்தி 2009 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு தேடியநிலையில் அவரை வேட்பாளராக்க அக்கட்சி மறுத்தது.

இந்த நேரத்தில் தான் சுயேட்சையாக சிர்சாவில் கோபால் போட்டியிட்டு 6,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏவானார்.

ஹூடா அரசுக்கு ஆதரவு:

இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை கைப்பற்றத் தவறியது, இரண்டாவது முறையாக முதல்வராக முயற்சித்த பூபிந்தர் சிங் ஹூடாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டியதால் அமைச்சர் பதவி கோபால் கண்டாவிற்கு கிட்டியது.

தற்கொலை சர்ச்சை:

இந்த நேரத்தில் தான் முக்கியமான சர்ச்சையில் கோபால் சிக்கினார். MDLR airlines நிறுவனத்தில் பணிபுரிந்த விமான பணிப்பெண் கீதிகா சர்மா (வயது 23) என்பவர் தற்கொலை செய்துகொண்டார். கோபாலினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாலேயே கீதிகா தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி வைத்துச் சென்ற கடிதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. 10 நாட்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியது, அழுத்தங்களுக்கு அடிபணிந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் கோபால். இந்த தற்கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறைவாசமும் அனுபவித்தார்.

2013ம் ஆண்டில் கீதிகாவின் தாயாரும் சில அழுத்தங்களுக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டார். தாய், மகள் என இரண்டு தற்கொலைகளுக்கும் கோபாலே காரணம் என்பது தான் தற்போது அவரை சுற்றி சுழண்றுகொண்டிருக்கும் சர்ச்சையாகும். இது தொடர்பான வழக்கு தற்போதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

2014ம் ஆண்டு இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்து ஹரியானா லோகித் என்ற கட்சியை தொடங்கி பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் சிர்சா தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கோபால் கண்டா, 602 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாகியுள்ளார்.

2007ம் ஆண்டு போலவே தற்போதும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சுயேட்சைகளின் ஆதரவுடன் அரசமைக்க பாஜக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று கோபால் கண்டா உட்பட 6 சுயேட்சை எம்.எல்.ஏக்களை பாஜக தலைவர்கள் சிலர் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில் தாய் மற்றும் மகள் என இரண்டு பெண்களின் தற்கொலைக்கு காரணமான மிகவும் தீவிரமான கிரிமினல் பின்னணியை கொண்ட கோபாலின் உதவியை பாஜக கோரக்கூடாது என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகிறது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதியும் கூட கறைபடிந்த கரங்களுக்கு சொந்தக்காரரான கோபாலின் உதவியை பாஜக கோரக்கூடாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் ஹரியானாவில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற சஸ்பென்ஸ் மேலும் நீடித்துக்கொண்டே வருகிறது.

கோபாலின் உதவியை பாஜக நிராகரிக்கும் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் சில உலா வந்துகொண்டும் இருக்கின்றன.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

5 hours ago

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு!

7 hours ago

சோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு!

8 hours ago

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

8 hours ago

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி!

9 hours ago

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

10 hours ago

மதுரையில் மனைவியை துன்புறுத்தியதாக கூடல்புதூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மீது வழக்கு!

10 hours ago

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

12 hours ago

ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

13 hours ago

சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை...!

14 hours ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!

14 hours ago

ஜம்மு - காஷ்மீர் - துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

16 hours ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

16 hours ago

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பத் சாவந்த் ராஜினாமா!

17 hours ago

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்; அவருக்கு வயது 86!

1 day ago

வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி!

1 day ago

சர்வாதிகாரியாக மாறுவேன் : திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

1 day ago

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியமைப்பதில் மீண்டும் குழப்பம்!

1 day ago

இந்தியா - வங்கதேசம் 3வது டி20: இந்திய அணி பேட்டிங்!

1 day ago

அமமுகவில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி அதிமுகவில் இணைய முடிவு!

1 day ago

வேலூர் வாலாஜாபேட்டையில் சரவணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை...!

1 day ago

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என கட்சி விதிகளில் திருத்தம்...!

1 day ago

திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

1 day ago

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

1 day ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு...!

1 day ago

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு....

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி!

1 day ago

நவ.9 இந்தியாவுக்கு வரலாற்று நாளாக இருக்கும்; இன்றைய நாள் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாள் : பிரதமர் மோடி

1 day ago

கடினமான வழக்குகளையும் தீர்க்க முடியும் என நீதித்துறை நிரூபித்துள்ளது : பிரதமர் மோடி

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது : பிரதமர் மோடி

1 day ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்!

1 day ago

நவ. 15 முதல் டிச. 15 வரையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

1 day ago

“இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று” - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: இல,கணேசன்

1 day ago

"நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது!" - மு.க.ஸ்டாலின்

1 day ago

"உச்சநீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது!" - பிரதமர் மோடி

2 days ago

"ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!" -அமித்ஷா

1 day ago

தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திருப்தி அடையவில்லை: சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கருத்து

1 day ago

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

1 day ago

வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 days ago

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

2 days ago

“அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்!” - உச்சநீதிமன்றம்

1 day ago

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு எதிரொலியாக நாளை காலை 11 மணி வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

1 day ago

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

இந்த வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி..!

2 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் அமித்ஷா ஆலோசனை!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை அடுத்து, மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு: உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

1 day ago

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் அமைதிகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

2 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் இன்று காலை தீர்ப்பு...!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

3 days ago

மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்!

2 days ago

தமிழக பாஜகவிற்கு 4 பேர் பொறுப்பு தலைவர்களாக நியமனம்!

3 days ago

“அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன்!”- ரஜினிகாந்த்

2 days ago

காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துக்கு நெற்றியடி: அர்ஜுன் சம்பத்

2 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த்

2 days ago

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது - ரஜினிகாந்த்

2 days ago

“நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” - கமல்ஹாசன்

2 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29.080க்கு விற்பனை...!

2 days ago

இந்தியாவின் திரை அடையாளங்களாக ரஜினி, கமல் திகழ்கின்றனர்: வைரமுத்து

2 days ago

ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு...!

2 days ago

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.

2 days ago

பாபர் மசூதி தீர்ப்பு - உ.பி. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை நீதிபதி ஆலோசனை!

2 days ago

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர்...!

2 days ago

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு வன்கொடுமை - 7 சிறுவர்கள் கைது....

2 days ago

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டி- இந்திய அணி அபார வெற்றி.

2 days ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்!

3 days ago

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை !

3 days ago

வரும் 24ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

3 days ago

3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

3 days ago

பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்துவைத்தார் கமல்ஹாசன்!

3 days ago

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய சிறப்பு அதிகாரியாக கீதா நியமனம்!

3 days ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று 2 ஆம் கட்ட ஆலோசனை...!

4 days ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை...!

4 days ago

ரூ.6,500 கோடி அளவுக்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது - முதல்வர்

4 days ago

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

3 days ago

திருச்சி மணப்பாறையில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ரூ.1.15 லட்சத்திற்கு விற்பனை!

3 days ago

அமைதியும், நல்லிணக்கமும் தான் வளமான எதிர்காலத்தை உருவாக்கும்: மன்மோகன் சிங்

3 days ago

சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது...!

3 days ago

கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் என புகார் - கேப்டன் கைது

4 days ago

அரசு முறை பயணமாக நவம்பர் 8ஆம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பயணம்!

4 days ago

காலை கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத் 6மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு!

4 days ago

கல்கி சாமியாரிடம் 2மணி நேரமாக வருமான வரித்துறையினர் விசாரணை!

4 days ago

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

4 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை தொடக்கம்..!

4 days ago

கோடநாடு கொலை வழக்கில் சயான் மீதான குண்டர் சட்ட உத்தரவு ரத்து..!

4 days ago

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணமில்லை: சரத்பவார்

5 days ago

“திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்பவர்களை சமூகம் மன்னிக்காது!” - அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

இந்து மதத்தின் ஒட்டுமொத்த கருத்துகளின் சாராம்சம்தான் திருக்குறள்: ஹெச்.ராஜா

4 days ago

சென்னை அருகே மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் விஜய் என்பவர் சரண்!

4 days ago

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

5 days ago

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கும்: வைகோ

4 days ago

தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது!

4 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை