Skip to main content

எங்கே போனது தீபாவளி கொண்டாட்டங்கள்?

October 27, 2019
Image

கிருஷ்ண குமார்

கட்டுரையாளர்

Image

தீபாவளிக்கு இன்னும் மொத்தமாக 4 நாட்களே மீதம் இருக்கின்றன. ஆனால், தீபாவளிக்கு இருக்கும் எந்த பரபரப்பையும் காணும்.

பொருளாதார மந்த நிலை, தொழில்களில் ஏற்பட்ட சுணக்கம் வேலையின்மை என்பது போன்ற பல்வேறு காரணங்களை சொல்லி, வியாபாரம் ஏதுமில்லாமல் துணிக்கடைகள், பட்டாசுக் கடைகள் காத்துவாங்குவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தீபாவளி கொண்டாடுவதில் இருக்கும் சுணக்கம் இந்த ஆண்டு திடீரென்றெல்லாம் ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அப்படிதான் இருக்கிறது. கொண்டாட்ட மனநிலை குறைந்துவிட்டதோ அல்லது தலைமுறை இடைவெளியோ ஏதோ ஒரு காரணமாக கூட இருக்கலாம். ஆனால் 90ஸ் கிட்ஸ்களின் தீபாவளி நிச்சயம் இப்படி இல்லை.

90ஸ் கிட்ஸ் தீபாவளி: 

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று கவுண்டவுன் வைத்து எண்ணிய காலம் ஒன்று இருந்தது. 90ஸ் கிட்ஸ்களின் காலம் தான். வரவிருக்கும் ஆண்டின் காலண்டர் கைக்கு வந்ததும் முதலில் தேடுவது அனேகமாக தீபாவளி எப்போது என்பதாக தான் இருக்கும். தமிழர்கள் பொதுவாகவே கொண்டாட்டங்களை விரும்புபவர்கள் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீபாவளி மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பொங்கல், சித்திரைத் திருநாள், கார்த்திகை என்று பண்டிகைகள் வரிசை கட்டி இருந்தாலும் தீபாவளி மீதான ஈர்ப்பு அதிகம் இருப்பதற்கு காரணம் அது கொண்டாடப்படும் விதம் என்றே சொல்லலாம்.

தீபாவளிக்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கிறது என்ற கவுண்டவுன் குறைந்து, நாளுக்கு மாறும்போது பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எப்போது புதிய உடை வாங்குவது, எவ்வளவுக்கு பட்டாசு வாங்குவது, என்னென்ன பலகாரம் செய்வார்கள் என்ற எண்ணம் தான் ஓடும். பிஜிலி வெடி, ஓலை பட்டாசு பெட்டிக்கடைகளில் விற்பனைக்கு வரும் நாளிலிருந்தே தீபாவளி தொடங்கி விடும். 10 ரூபாய்க்கு ஒரு பிஜிலி வெடி பாக்கெட்டை வாங்கினால் ஒரு நாள் முழுவதும் வெடிக்கலாம். மாலையில் கொஞ்சம் வெடி, காலையில் எழுந்து பள்ளிக்குப் போகும் முன் கொஞ்சம் வெடி, திரும்ப பள்ளி விட்டு வந்ததும் கொஞ்சம் வெடி என்று பார்ட் பார்ட்டாக பிரித்து வெடிப்பார்கள். யானை வெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி எல்லாம் கொஞ்சம் பெரியவர்களின் சமாச்சாரம். விலையும் கொஞ்சம் அதிகம் என்பதால், பிஜிலி வெடியின் சத்தத்திற்கிடையே எப்போதாவது பெரிய வெடிகளின் சத்தம் கேட்கும். சிறுவர்கள் பொட்டுவெடியை வாங்கி கல்லால் நசுக்கி வெடிப்பது தொடங்கி, நாள் ஆக ஆக ரோல் கேப்புக்கு மாறும். 

‘எப்படா தீபாவளி வரும் என்ற ஏக்கம்’

பொங்கல் பண்டிகைக்கு புதிய உடை எடுத்தாலும், தீபாவளிக்கு புது உடை எடுப்பதில் தான் ஆர்வம் இருக்கும். இப்போது, தீபாவளிக்கு முதல் நாள் வரை எடுக்கிறார்கள். ஆனால், தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் போதே புதிய உடைகளை எடுத்துவைத்து, தினமும் ஒரு முறை எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் வைக்கும் போது, எப்படா தீபாவளி வரும் என்ற ஏக்கத்தை இப்போதிருக்கும் குழந்தைகள் அனுபவித்திருப்பார்களா என்று தெரியாது. ஆனால், அந்த உடையை போடப்போகும் நாளுக்காக ஆர்வத்தோடு காத்திருந்ததும் ஒரு சுகமான அனுபவமே.

தீபாவளிக்கு முதல் நாள் கடைத்தெருவிற்கு போய் எதுவுமே வாங்காவிட்டாலும், நள்ளிரவு வரை கட்டுக்கடங்காத தீபாவளி கூட்டத்தில் நன்றாக சுற்றிவிட்டு ஹோட்டல்களில் பரோட்டா வாங்கித் தின்றுவிட்டு வீடுவந்து சேரும் சந்தோசத்தை, கூட்டத்தைப் பார்த்தாலே அலர்ஜியாகும் இப்போதைய தலைமுறை அனுபவிப்பதில்லை.

முறுக்கு, அதிரசம், சோமாஸ், சீடக்காய், ஓலை பக்கோடா என்று நீளும் பலகாரங்களை இப்போது முறுக்கு, குலோப்ஜாமுன்களோடு முடிந்துவிடுகிறது. அடுப்பை பற்றவைத்து, இரண்டு மூன்று தவணையில் முறுக்கு சுட்டது போய், தற்போது பேக்கரியில் மொத்தமாக ஆர்டர் கொடுத்துவிட்டு அடுப்பங்கறை அனலில் வேகும் நிலையை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், முறுக்கு சுடும்போதே சுடசுட எடுத்து திண்ணும் இருந்த மகிழ்ச்சி, பேக்கரியில் பேக் செய்து வரும் முறுக்கை திண்ணும்போது நிச்சயம் இருக்காது.

தீபாவளி அன்று காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசுகளை கொளுத்திவிட்டு, காலை சாப்பிட இட்லி, சட்னி, பஜ்ஜி இனிப்புகள் என்று இலை நிரம்பும். மதியத்திற்கு பெரும்பாலானோர் வீடுகளில் மட்டன் மணக்கும். சாப்பிட்டு விட்டு அக்கம்பக்கத்தினருக்கு வீட்டில் செய்தவற்றை பகிர்ந்து கொடுத்துவிட்டு, நண்பர்கள், உறவினர்களை சந்தித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தால், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம். பின்னர் மாலை எழுந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை நீளும். அதன் பிறகு யார் வீட்டில் அதிகம் பட்டாசு வெடிக்கப்பட்டது என்ற கணக்கெடுப்பு தொடங்கும். தங்கள் வீட்டில் தான் பட்டாசு அதிகம் வெடிக்கப்பட்டது என்பதை காட்டிக்கொள்ள, பக்கத்து வீட்டு பட்டாசு குப்பைகளை நம்வீட்டு வாசலில் தள்ளுவது, கேட்பதற்கு கோமாளித்தனமாக இருந்தாலும், அதெல்லாம் நடக்கதான் செய்தது.

ஒவ்வொருவரது பணபலத்திற்கு ஏற்றவாறு தீபாவளி கொண்டாட்டம் இருக்கும். செல்வந்தர்கள் வீடுகளில் வான வேடிக்கைகள் இருக்கும். நடுத்தர குடும்பத்தினருக்கு ராக்கெட் தான் அதிகபட்சம். நடுத்தர குடும்பத்திற்கு கீழே இருப்பவர்களுக்கு புஸ்வானம் தான் அதிகபட்சம். அப்போது 5000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் ஒரு அட்டைபெட்டி முழுதும் வரும். தற்போது ஒரு கேரி பேக்கிற்குள் அடக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. அதிகப்படியான விலை, பட்டாசு வெடிப்பதில் குறைந்த ஆர்வம் போன்றவற்றால் இந்த தீபாவளிக்கு பட்டாசு கடைகள் காத்து வாங்குகிறது.

பண்டிகைகள் மீதான ஆர்வம் குறைய காரணம் என்ன?

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் ஆர்வம் குறைந்து வருவது கொஞ்சம் வருத்தத்திற்குரிய உண்மை.  துணிகளை வாங்க, கடை கடையாக ஏறி இறங்கியவர்கள் தற்போது ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு, பண்டிகைகள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய பண்டிகைகளின் போது பெரும்பாலும் அந்த வீட்டின் முதல் தலைமுறையாக படிக்கச் சென்றவர்களாக இருந்தனர். அவர்கள் பட்டதாரிகளாகி தற்போது ஓரளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்தபிறகு, தங்களுக்கு தேவையான நேரத்திற்கு கொண்டாடப் பழகிக்கொண்டனர். வீக் எண்ட் பார்ட்டி, அவுட்டிங், ஷாப்பிங், நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்கி சாப்பிடும் அளவிற்கு உணவகங்கள் என்று எல்லாம் எளிதாகியிருக்கிறது. தீபாவளியை கடன் வாங்கி கொண்டாடிய நிலைகளில் தற்போது அவர்கள் இல்லை என்பதே உண்மை. அதோடு, FDFS என்ற வார்த்தைகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ் அறிந்திராத்து. இப்போது தீபாவளி எதிர்பார்ப்புகளைத் தாண்டி, FDFS டிக்கெட்டுகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறது காலம். தீபாவளி நாளன்று வெளியே சுற்றியது போய் “இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" போடப்படும் திரைப்படங்கள் வீட்டினுள்ளேயே முடக்குகிறது.

இவைமட்டுமல்லாமல்  அலைச்சல் ஆகியவையே கொண்டாட்டத்தின் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது. அதோடு தலைமுறை இடைவெளியும் முக்கிய காரணம். ப்ளாக் அண்ட் ஒயிட் டிவியிலிருந்து LED டிவி வரையிலான பெரும் மாற்றத்தை 90ஸ் கிட்ஸ் பார்த்தனர். ஆனால் 2K கிட்ஸிற்கு இந்த இடைவெளி மிக மிக்குறைவு. தலைமுறை இடைவெளி என்பது தற்போது இரண்டு ஆண்டுகள் என்ற அளவிற்கு சுருங்கியிருப்பதும், நாங்கள் தான் கஷ்டப்பட்டோம் தங்கள் பிள்ளைகள் அதை படக்கூடாது என்று பெற்றோர்கள் அதிகப்படியாக செலவழிக்க தொடங்கியது கூட காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, தீபாவளி அப்படியே தான் இருக்கும். வழக்கம்போல ஆண்டுதோறும் வரும். அதை உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்னமும் 90ஸ் கிட்ஸ் கைகளில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்

4 hours ago

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு!

6 hours ago

சோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு!

7 hours ago

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

7 hours ago

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி!

8 hours ago

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

9 hours ago

மதுரையில் மனைவியை துன்புறுத்தியதாக கூடல்புதூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மீது வழக்கு!

9 hours ago

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

11 hours ago

ஹைதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

12 hours ago

சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை...!

13 hours ago

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது...!

13 hours ago

ஜம்மு - காஷ்மீர் - துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

15 hours ago

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு!

15 hours ago

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பத் சாவந்த் ராஜினாமா!

16 hours ago

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்; அவருக்கு வயது 86!

1 day ago

வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா!

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி!

1 day ago

சர்வாதிகாரியாக மாறுவேன் : திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

1 day ago

மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியமைப்பதில் மீண்டும் குழப்பம்!

1 day ago

இந்தியா - வங்கதேசம் 3வது டி20: இந்திய அணி பேட்டிங்!

1 day ago

அமமுகவில் அதிருப்தியில் இருந்த புகழேந்தி அதிமுகவில் இணைய முடிவு!

1 day ago

வேலூர் வாலாஜாபேட்டையில் சரவணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை...!

1 day ago

திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என கட்சி விதிகளில் திருத்தம்...!

1 day ago

திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

1 day ago

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

1 day ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு...!

1 day ago

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு....

1 day ago

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி!

1 day ago

நவ.9 இந்தியாவுக்கு வரலாற்று நாளாக இருக்கும்; இன்றைய நாள் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாள் : பிரதமர் மோடி

1 day ago

கடினமான வழக்குகளையும் தீர்க்க முடியும் என நீதித்துறை நிரூபித்துள்ளது : பிரதமர் மோடி

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது : பிரதமர் மோடி

1 day ago

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்!

1 day ago

நவ. 15 முதல் டிச. 15 வரையிலான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

1 day ago

“இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று” - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்: இல,கணேசன்

1 day ago

"நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது!" - மு.க.ஸ்டாலின்

1 day ago

"உச்சநீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது!" - பிரதமர் மோடி

2 days ago

"ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!" -அமித்ஷா

1 day ago

தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் திருப்தி அடையவில்லை: சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜிலானி கருத்து

1 day ago

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்புகளிடமே வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

1 day ago

வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 days ago

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

2 days ago

“அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும்!” - உச்சநீதிமன்றம்

1 day ago

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னதாகவே ராமர் மற்றும் சீதையை இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரம் உள்ளது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு எதிரொலியாக நாளை காலை 11 மணி வரை மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!

1 day ago

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

மீர்பாகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

இந்த வழக்கில் நடுநிலைமை காக்கப்படும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

1 day ago

பாபர் மசூதி வழக்கில் ஷியா மற்றும் வக்பு வாரிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி..!

2 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் நிலையில் அமித்ஷா ஆலோசனை!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை அடுத்து, மதுரை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!

1 day ago

பாபர் மசூதி தீர்ப்பு: உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

1 day ago

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் அமைதிகாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

2 days ago

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலை!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் இன்று காலை தீர்ப்பு...!

1 day ago

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

3 days ago

மகாராஷ்டிரா: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்!

2 days ago

தமிழக பாஜகவிற்கு 4 பேர் பொறுப்பு தலைவர்களாக நியமனம்!

3 days ago

“அரசியல் கட்சி தொடங்கும்வரை திரைப்படங்களில் நடிப்பேன்!”- ரஜினிகாந்த்

2 days ago

காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற கருத்துக்கு நெற்றியடி: அர்ஜுன் சம்பத்

2 days ago

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: நடிகர் ரஜினிகாந்த்

2 days ago

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது - ரஜினிகாந்த்

2 days ago

“நானும், ரஜினியும் ஒருவருக்கொருவர் ரசிகர் தான்!” - கமல்ஹாசன்

2 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29.080க்கு விற்பனை...!

2 days ago

இந்தியாவின் திரை அடையாளங்களாக ரஜினி, கமல் திகழ்கின்றனர்: வைரமுத்து

2 days ago

ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு...!

2 days ago

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.

2 days ago

பாபர் மசூதி தீர்ப்பு - உ.பி. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை நீதிபதி ஆலோசனை!

2 days ago

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர்...!

2 days ago

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு வன்கொடுமை - 7 சிறுவர்கள் கைது....

2 days ago

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டி- இந்திய அணி அபார வெற்றி.

2 days ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்!

3 days ago

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை !

3 days ago

வரும் 24ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

3 days ago

3 நாள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

3 days ago

பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்துவைத்தார் கமல்ஹாசன்!

3 days ago

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய சிறப்பு அதிகாரியாக கீதா நியமனம்!

3 days ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று 2 ஆம் கட்ட ஆலோசனை...!

4 days ago

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை...!

4 days ago

ரூ.6,500 கோடி அளவுக்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது - முதல்வர்

4 days ago

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

3 days ago

திருச்சி மணப்பாறையில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ரூ.1.15 லட்சத்திற்கு விற்பனை!

3 days ago

அமைதியும், நல்லிணக்கமும் தான் வளமான எதிர்காலத்தை உருவாக்கும்: மன்மோகன் சிங்

3 days ago

சென்னை அண்ணா நகரில் நகை வாங்குவது போல நடித்து நகை திருடிய இருவர் கைது...!

3 days ago

கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் என புகார் - கேப்டன் கைது

4 days ago

அரசு முறை பயணமாக நவம்பர் 8ஆம் தேதி துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பயணம்!

4 days ago

காலை கைது செய்யப்பட்ட அர்ஜூன் சம்பத் 6மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு!

4 days ago

கல்கி சாமியாரிடம் 2மணி நேரமாக வருமான வரித்துறையினர் விசாரணை!

4 days ago

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

4 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை தொடக்கம்..!

4 days ago

கோடநாடு கொலை வழக்கில் சயான் மீதான குண்டர் சட்ட உத்தரவு ரத்து..!

4 days ago

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணமில்லை: சரத்பவார்

5 days ago

“திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்பவர்களை சமூகம் மன்னிக்காது!” - அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

இந்து மதத்தின் ஒட்டுமொத்த கருத்துகளின் சாராம்சம்தான் திருக்குறள்: ஹெச்.ராஜா

4 days ago

சென்னை அருகே மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் விஜய் என்பவர் சரண்!

4 days ago

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

5 days ago

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கும்: வைகோ

4 days ago

தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது!

4 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.72/Ltr
  • டீசல்
    69.55/Ltr
Image பிரபலமானவை